Header Ads

causes and remedies for fatty tumors கொழுப்பு கட்டிகள் ஆபத்தானவையா?




உடலில் சிலருக்கு கொழுப்பு கட்டிகள் தோன்றும். இதனை லிபோமா என்று அழைப்பார்கள். கொழுப்பு திசுக்கள் உடலின் உட்பகுதியில் வளர்ச்சிபெரும் நிலைதான் இது. இந்த லிபோமாக்கள் புற்றுநோய் கட்டிகள் அல்ல. இவை பெரும்பாலும் கழுத்து, அக்குள், தொண்டை, கைகளின்  மேற்புறம் போன்ற இடங்களில் தோன்றும்.
மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த கட்டிகள் எவ்வித வலியையும் தராது. அப்படியே வளர்ந்தாலும் மிகவும் மெதுவாகவே வளர்ச்சி பெறும்.
 
இந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். இருப்பினும் இந்த சிகிச்சைகளால் மீண்டும் லிபோமா வராது என்ற உறுதியும் இல்லை. ஆனால் இந்த கொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது, 
 
கொழுப்பு கட்டி கரைய ஒரு பருத்தி துணியில் சிறிது கல்லுப்பை போட்டு முடிந்து கொண்டு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யில் அந்த முடிப்பை தோய்த்து ஒரு தோசைக்கல்லில் சூடேற்றி அதில் இந்த முடிப்பை வைத்து, தாங்கும் அளவுக்கு சூடேற்றி கொழுப்பு கட்டிகளின்  மீது ஒத்தடம் கொடுத்து வரவேண்டும்.
 
கொழுப்பு கட்டிகள் கரைய தினமும் ஆரஞ்சு பழத்தை அதிகளவு உட்கொள்ளவும். குறிப்பாக விதை உள்ள ஆரஞ்சு பழங்களை மட்டுமே  உண்ணவேண்டும்.
Powered by Blogger.