Header Ads

asthma treatment in tamil ஆஸ்துமாவை சுவடே இல்லாமல் துரத்திடலாம்






மூச்சு இளைப்பு, மார்பை இறுக்கி பிடித்தல் போன்ற தன்மை, இருமல், சளி, தும்மல்  போன்றவை தொடர்வது ஆஸ்துமாவின் அறிகுறியாகும். மூக்கு சளி, தும்மலோடு பத்து ஆண்டுகளாக கஷ்டபடும் ஒருவரை பரிசோதனை செய்தால், அவர் 50 சதவீதம் ஆஸ்துமா நோயாளியாக இருக்க வாய்ப்புண்டு.
ஆஸ்துமா சளி, இருமல் மூலம் வெளிப்பட்டு, இளைப்பாக மாறுகிறது. இருமலோடு மூச்சு விடும் போது பூனை சத்தம்போல் வெளிவந்தால் அதற்கு முழுமையான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது குணப்படுத்த முடியாத 'சி.ஓ.பி.டி' என்ற நிலையை எட்டிவிடும்.



நுரையீரலில் உருவாகும் இருமல், சளி போன்றவை தொடர்ந்தால், நாளடைவில்நுரையீரல் ரத்தக் குழாய்களை இறுக்கமாக்கிவிடும். அதனால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இருதயத்திற்கு ரத்தம் செல்வது குறையும். அப்போது இருரதயம் தேவைக்கு அதிகமாக வேலை செய்யும். அதனால் களைப்பாகி, இருதயம் தன் செயல்திறனை இழந்து விடும். 

மேற்கண்ட பாதிப்பிற்கு உள்ளாகிறவர்களுக்கு கால்கள் வீங்கி, வயிற்றில் நீர்கோர்க்கும். முகமும் வீங்கி காணப்படும். குனிய, நிமிர முடியாமல் அவதிப் படுவர். அவர் அசைய வேண்டுமென்றால் துணைக்கு ஒருவர் வேண்டும். 'நெபுலைசர்' போன்ற கருவியையும், மருந்துகளையும் எப்போதும் உடன் கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.
அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படும்.தும்மல், சளி, இருமல், மூச்சு இளைப்பு போன்றவைகளை அலட்சியப்படுத்துபவர்களுக்கு இந்நிலை ஏற்படுகிறது.
Powered by Blogger.