Header Ads

how to eat almonds பாதாமின் முழுச்சத்தும் கிடைக்க எப்படி சாப்பிடனும் தெரியுமா?





பாதாம்... பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்

பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58  சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது! இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக்  குறையுமாம். பாதாமிலுள்ள நல்ல கொழுப்புதான் அதற்கு காரணம்

எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து  பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்

நரம்பு தளர்ச்சியை சரி செய்யும் அதுமட்டுமல்லாமல் மூளையை பலப்படுத்தும் மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது. இவற்றை எல்லாம் மனதில் வைத்து, அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிடுங்கள். 
Powered by Blogger.