cough and cold home remedy மூன்றே நாளில் கடுமையான சளி மற்றும் இருமலை போக்கும் கசாயம்
சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, இரவு படுக்கும் பொழுது, இருமல் படுத்தி எடுத்துவிடும். இந்த சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுபட இயற்கையான வழிமுறைகள் என்னவென்று இங்கே பார்க்கலாம்.
ஒரு குழந்தைக்கு இருமல் அல்லது சளி இருந்தால், அக்குழந்தையினை கதகதப்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அக்குழந்தையை முடிந்த அளவுக்கு, சாப்பிடவும், குடிக்கவும் உற்சாகப்படுத்த வேண்டும்
சில நேரங்களில் இருமல் மற்றும் சளி போன்றவை மோசமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு அடையாளங்களாகும். ஒரு குழந்தை வேகமாக சுவாசித்தாலோ அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டாலோ அக்குழந்தைக்கு நிமோனியா (சளிக்காய்ச்சல்) இருக்கும். இது ஒரு நுரையீரல் நோய்தொற்று. இது ஒரு ஆபத்தான நோய் என்பதால், அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை.
பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு முழுக்க தாய்ப்பால் கொடுப்பது, போஷாக்கான உணவுகளை அளிப்பது, தடுப்பூசிகளை முழுமையாக போடுவதின் மூலமும் குழந்தைகளுக்கு நிமோனியா வருவதை தடுத்து நிறுத்த முடியும்.
ஒரு குழந்தைக்கு கடுமையான இருமல் இருந்தால், அக்குழந்தைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. அக்குழந்தைக்கு டியூபர்குளோஸிஸ் (எலும்புருக்கி நோய்) இருக்கலாம். இது ஒரு நுரையீரலில் ஏற்படும் நோய்தொற்று