Header Ads

back pain home remedy முதுகுவலி உள்ளவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய வீடியோ






உணவு குறைப்பாடு:
உணவில் போதிய அளவு வைட்டமின்  சத்துக்கள் இல்லாததும் ஒரு காரணம். அதிக அளவு புரதம் மற்றும்  கொழுப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும். செயற்கை குளிர்பானங்களை  அதிகம் குடித்தால் எலும்புகளின்  உறுதி குறைந்துவிடும் வாய்ப்பு உண்டு. மேலும் கால்சியம் பற்றாக் குறையாலும் எலும்புகள் அடர்த்தி குறைந்துவிடுவதால் முதுகுவலி தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.


எதிலும் கவனமின்மை:
அதிக உடல் உழைப்பு முதுகுவலி ஏற்பட முதல் காரணம். அதிக உழைப்பின் காரணமாக தசைகள், தசை கால்கள், தசைபிடிப்புகள் உண்டாகிறது. இருசக்கரவாகனங்களில் நெடுந்தொலைவு பயணிக்கும் போது குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளில் வேகமாக பயணிப்பதும் ஒரு கார ணம். உடல் எடைக்கு மீறிய எடையை குனிந்தபடி தூக்கி வேகமாக நிமிர்வதும் அதை முறையற்ற முறையில் தூக்கி நிமிர்த்துவதும் முதுகு வலிக்கு காரணமாக அமைகிறது. மேலும் தூங்கும் போது கோணலாக படுப்பதும் கூட உடலில் ஒரு வித அசெளரியத்தை உண்டாக்கி முதுகு வலியை உண்டாக்குகிறது. 
Powered by Blogger.