Header Ads

hair dye side effects தலைக்கு டை அடிப்பதால் கூந்தலுக்கு ஏற்படும் பக்க விளைவுகள்








தலை முடிக்கு நிரந்தரமாக சாயம் ஏற்றுவதற்கு , முடியின் பாதுகாவலன் ஆன புறத்தோல் பகுதியை சற்றே தளர்த்தி விட வேண்டும். இதை செயல்படுத்துவதற்கு , கூந்தல் சாயங்களில் அம்மோனியா(Ammonia) சேர்க்கப்படுகிறது! இப்பொழுது புறத்தோல் பகுதியை தளர்த்தியாயிற்று, இனி கூந்தலின் இயற்கையான நிறத்தை மாற்றுவதற்கான வேலைகளை பார்க்கலாம்! அந்த வேலையை திறம்பட செய்வதற்கு முன்னே ,உங்கள் கூந்தலின் இயற்கையான நிறத்தை கூண்டோடு ஒழித்து விட வேண்டும் !

 அந்த வேலையை திறம்பட செய்ய திருவாளர் பெராக்ஷைட்(Peroxide) களம் இறக்கப் படுகிறார். அவர் , நம் கூந்தலுக்கு , இயற்கையான நிறத்தை அளிக்கும் , மெலனின் நிறமிகளை போட்டு தள்ளுகிறார்! அதன் பின்னே , நீங்கள் ஆசைப்பட்ட செயற்கை நிறத்தில்  கூந்தலுக்கு சாயம் இடப்படுகிறது! நன்கு சாயம் காய்ந்த பின்னே , தண்ணீரை கொண்டு கூந்தல்  கழுவ படுகிறது! அவ்வாறு கழுவி முடிந்த பின்னே , புறத்தோல் தன்  இயல்பு நிலைக்கு கொண்டு வரப் விடுகிறது! என்னதான் புறத்தோல்(Cuticle) இயல்பு நிலைக்கு கொண்டு  வரப்பட்டிருந்தாலும் , கூந்தலுக்கு  சேதம் ஆனது ஆனது தான்! அதன் இழப்பை எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது!எப்படி வாழை பழத்தை தோல் உரித்த பின்னே , உரித்த தோல் கொண்டு மூடி , அதை பாதுகாக்க முடியாதோ , அதே போல் , புறத்தோலை தளர்த்தி , தலை முடிக்கு சாயம் ஏற்றிய பின்னே , அதை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாலும், அதனுள் இருக்கும் புறணி பகுதி(Cortex) , பரிபூரண பாதுகாப்போடு விளங்குகிறதா என்பது சந்தேகம் தான்!
Powered by Blogger.