உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம். குறிப்பாக நம் உடலில் எங்கயாவது மரத்து போனால் அது நம் மூளை, முதுகுத்தண்டு வடத்தில் ஏதேனும் பிரச்சனை என்ற அறிகுறியாகும்.
அதுவே நம் உடலில் இரண்டு கால்களும் மரத்து போனால் அது சர்க்கரை நோய்களுக்கான அறிகுறியாகும். அதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது என்ற அறிகுறியாகும்.
அதுவே ஒருவருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்சனை இருந்தால் அது மரபு அணுக்களின் கோளாறாக கூட இருக்கலாம்.
அதேபோல் ஏதேனும் ஆன்டிபயாடிக் மாத்திரை மற்றும் புற்று நோயை குணப்படுத்தும் மாத்திரை என்று தொடர்ந்து நீங்கள் மாத்திரை எடுத்து கொண்டிருந்தாலும் கை, கால்கள் அடிக்கடி மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.
மேலும் தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இந்த கை, கால்கள் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும்.
உடல் எடை அதிகரித்து உடலில் அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது.
இந்த மரத்து போகும் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிசைகளை முறையாக அளித்தாலே இந்த மரத்து போகும் பிரச்சனையை சரி செய்துவிட முடியும்.
வைட்டமின் B12 குறைபாடுகள் இருந்தாலும் இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும், எனவே உடலுக்கு தேவையான அளவிற்கு வைட்டமின் B12 நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ளவும்.
அதேபோல் தொழுநோயால் பாதிக்கப்பட்டரர்களுக்கும் இந்த கை, கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும். தொழு நோய் உள்ளவர்கள் மீது சூடான தண்ணீரை ஊற்றினால் கூட அவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்காது. எனவே தொழு நோய் உள்ளவர்கள் தங்களது தோலை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை முறைகளை கடைபிடிக்கவும்.
சர்க்கரை நோயாளிகள் அவர்களது கை, கால்கள் மரத்து போகாமல் இருக்க வேண்டும் என்றால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக இவர்களுக்கு கால்களில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அவர்களது நரம்புகளுக்கு அதிகளவு பாதிக்கப்படும்.
குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு கை கால்கள் அடிக்கடி மரத்து போனால் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அறிகுறியாகும்.
சிலருக்கு தலை ஒரு பக்கம் மட்டும் மரத்து போய்விடும் அது பக்கவாதத்திற்கான அறிகுறிகள் ஆகும். எனவே அவர்கள் நரம்பியல் மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
numbness symptoms அடிக்கடி கை கால் மரத்துபோவது ஏன் தெரியுமா..?
Reviewed by tamil4health
on
December 14, 2019
Rating: 5