Header Ads

/badam-pisin-health-benefits-in-tamil பாதாம் பிசினை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?





பாதம் மரத்தில் இருந்து பாசை போல வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் வடியும் பிசினே பாதாம் பிசின் ஆகும். இந்த பிசின் பழங்காலத்தில் இருந்தே மருந்தாக பயன்படுத்தி வரப்பட்டுள்ளது. பாதம் பிசினில் அதிகப்படியான நுண்ணுட்ட சத்துக்கள் நிரைந்து உள்ளன அத்துடன் அதிக மருத்துவ குணம் கொண்டது.

பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்க்கு உறுதியாக நின்று உடலில் தாது (மினரல்ஸ்) பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வரட்ச்சியை, வெடிப்புகளை குணமாக்கும்
.
பெரும்பாலன காலங்கள் வெப்பமாகவே இருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகி அவதிக்கு ஆலாக்குகிறது, உஷ்ணத்தால் உடலில் நீர் பற்றாக் குறை ஏற்பட்டு சிலருக்கு வேறு சில உடல் நல பாதிப்புகளை ஏற்படுகிறது நீர் சுருக்கு, சிறுநீர் அடைப்பு, சிறு நீரக கல் போன்றவைகள். இதனை தவிர்க்க ஊரவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வர மேற்கூறிய உஷ்ண நோய்கள் தீரும்.

குழைந்தை பெற்ற தாயமார்கள் உடலில் சக்தி இழந்து இருப்பர்கள் இவர்கள் பாதம் பிசின் கலந்த பாலை சாப்பிடுவதால் கருப்பையில் உள்ள நச்சு நீங்கி உடல் வலுவடையும், வட இந்தியாவில் குழைந்தை பெற்ற பெண்களுக்கு பாதாம் பிசின் கலந்த லட்டு இனிப்புகள் கொடுப்பது இன்றும் நடை முறையில் உள்ளது.
Powered by Blogger.