Header Ads

fast weight loss home remedy வேகமாக உடல் எடையை குறைக்க எளிய வழி





சாதாரண எடையை விட 20 சதவிகித எடை அதிகரித்தலையே உடல் பருமன் என்கிறோம். இந்நிலை, அளவுக்கதிகமாக கொழுப்புத் திசுக்கள் உடலில் சேருவதால் ஏற்படுகிறது. உடல் பருமன் என்பது சக்தியின் கூடுதல் சமநிலையை (Positive energy balance) குறிக்கும். இந்நிலையில் நாம் உண்ணும் கலோரியின் அளவு, நமது தேவையை விட அதிகமாக இருக்கும்.

முழு உணவு வேளைகளுக்கு (Meals) இடையில் உணவைக் கொறிக்கும் பழக்கமே உடல் பருமனை உண்டாக்கும் முக்கியக் காரணியாகும். குறைந்த கலோரி அளவைக் கொண்ட காய்கறிகள், பழங்களைக் காட்டிலும், விலை குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளையே மக்கள் விரும்பி உண்ணுவதும் உடல் பருமனுக்கு ஒரு காரணமாகும்.

சுருங்கச் சொன்னால், நாம் எத்தனை வேளை சாப்பிடுகிறோம் என்பதை விட, எவ்வளவு கலோரிகள் உட்கொள்கிறோம் என்பதே உடல் பருமானவதற்குக் காரணமாகும்.
35 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே உடல் பருமனாதல் அதிகம் காணப்படுகிறது. இதற்கு ஒரு காரணமாக உடலியக்க செயல்பாடுகள் குறைவதும், மற்றொரு காரணமாக சாப்பிடும் சாப்பாட்டின் அளவு குறையாமல் அதே அளவோ அல்லது அதற்கும் மேலே அதிகரிப்பதையும் கூறலாம். பொருளாதார வசதி கூடுவதாலும், உண்ணும் உணவின் அளவு அதிகரிக்கலாம்.
Powered by Blogger.